×

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

சங்கரன்கோவில்,மே 6: சங்கரன்கோவிலில் ஆர்டிஓ தலைமையில் நடந்த ஆய்வில் 24 பள்ளி வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டன. சங்கரன்கோவிலில் ஆண்டுதோறும் பள்ளி திறப்பதற்கு முன்பு குறிப்பாக மே மாதம் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆர்டிஒ தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள 210 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆர்டிஓ கவிதா, டிஎஸ்பி சுதீர், வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் ரகு, மாவட்ட கல்வி அலுவலர் தனியார் (பள்ளிகள்) தேவிகாராணி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன் உள்ளிட்டோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது பள்ளி பேருந்தில் உள்ள அவசர வழி, முதலுதவி பெட்டி, சிசிடிவி கேமிரா, வேகக்கட்டுப்பாட்டு கருவி போன்றவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சேதமடைந்த அவசர வழி, துருப்பிடித்த இரும்பு பாகங்கள் போன்ற பல்வேறு குறைபாடுகள் காரணமாக 24 பள்ளி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

அவை முழுமையாக சரி செய்யப்பட்டப் பின்னரே இயக்கவேண்டும் என்று ஆர்டிஓ கவிதா உத்தரவிட்டார். முன்னதாக பள்ளி வாகன ஓட்டுனர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிகளின்படி வாகனத்தை இயக்கவேண்டும், குழந்தைகள் வாகனத்தில் ஏறியதை உறுதி செய்த பிறகே இயக்கவேண்டும், வாகனத்தை ஓட்டும்போது மது அருந்தக் கூடாது, செல்போன் பேசக்கூடாது போன்ற பல்வேறு ஆலோசனை அவர்களுக்கு வழங்கப்பட்டது.

The post சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Shankaran temple ,Sankarankovil ,RTO ,Sankarankoil ,Dinakaran ,
× RELATED தேவர்குளம் காவல் நிலைய அதிகாரிகளை...